கணவன் மனைவியின் குளியல் காட்சிகளை நவீன தொழில் நுட்பத்தின் உதவியுடன் வீடியோ எடுத்த சிறுவர்களின் செயல் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
நவீன தொழில் நுட்பம் வளர வளர அதனால் ஏற்ப்படும் ஆபத்துக்களும் அதிகரித்து வருகின்றன.
அதற்கு உதாரணமாக ஒரு உண்மை சம்பவத்தை காண்போம்
பெருநகரில் உள்ள ஒரு அடுக்குமாடி வீட்டின் 20வது மாடியில் நடுத்தர வயதுடைய ஒரு பணக்கார தம்பதிகள் வசித்து வந்தார்கள். அவர்களின் இரண்டு பிள்ளைகளும் வெளிநாட்டில் படித்து வந்தார்கள்.
அவர்கள் வீடு மிக பெரியது. குளியலறை மிக ரசனையாக இருவர் சேர்ந்து குளிக்கும் அளவுக்கு கட்டியிருந்தார்கள்.
அதில் இருவரும் சேர்ந்து தினமும் இருவேளை குளிப்பது அவர்களது பொழுதுபோக்காக இருந்தது.
மேலும் இருவரும் அரைகுறை ஆடையுடன் சமையல் அறையில் நின்று சமைப்பது வழக்கமாகும்.
திடீரென்று ஒருநாள் அவர்களது குளியல்அறை காட்சி படங்கள், சமையல் செய்யும் காட்சி ஆகியவை இணையத்தில் வெளிவந்ததை கண்டு அவர்கள் அதிர்ந்து போனார்கள்.
பின்னர் தங்களுக்கு தெரிந்த பொலிஸ் அதிகாரிகளின் துணை கொண்டு இதை யார் படம் எடுத்தது என விசாரணை நடத்தினார்கள்.
அதில் திடுக்கிடும் உண்மை தெரியவந்தது.
இதை செய்தது 15 வயதுடைய சிறுவர்கள் என்பதும், அவர்கள் இந்த தம்பதிகளின் வீட்டின் சற்று தூரத்தில் உள்ள வீட்டில் வசிப்பதும் தெரியவந்தது.
பொலிஸ் சிறுவர்களிடம் விசாரித்தபோது, ரகசியமாக படம்பிடிக்கும் கமெராக்கள் பற்றியும், தூரத்தில் இருப்பதை துல்லியமாக பார்க்கும் பைனாகுலர்கள் பற்றியும் கேள்விப்பட்டு, அவைகளை வாங்கினோம்
நண்பர்களோடு சேர்ந்து அவைகளை பயன்படுத்தி எதிர்புறமுள்ள வீடுகளை பார்த்தோம். அப்போதுதான் அந்த அங்கிள், ஆன்டியின் வித்தியாசமான காட்சிகள் கண்ணில்பட்டன. அதை படம் பிடித்துவைத்திருந்தோம் என கூறியுள்ளனர்.
மேலும் தங்களது நண்பன் இந்த காட்சிகளை எங்களுக்கு தெரியாமல் இணையத்தில் விட்டதாக அவர்கள் அப்பாவியாக கூறியுள்ளனர்.
அதிர்ச்சியடைந்த பொலிசார் அவர்களை எச்சரித்து அனுப்பியிருக்கிறார்கள்.