Monday, 6 March 2017

தொடர் ஆபாச படங்கள், பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் தகப்பன் நான்



சத்யராஜ் எப்போதும் மனதில் பட்டதை வெளிப்படையாக கூறுபவர். இவர் சமூக வலைத்தளங்களில் இல்லை என்றாலும் சமூகத்தில் நடப்பதை அனைத்தையும் அறிந்து வைத்துள்ளார்.
சமீபத்தில் சுசித்ரா தொடர்ந்து நடிகைகள், நடிகர்களின் அந்தரங்க போட்டோக்களை வெளியீட்டு வருகிறார், இதை ஆர்வமாக சில இளைஞர்கள் அடுத்து என்ன என்பது போல் கேட்டு வருகின்றனர்.
இவர்களுக்காகவே சத்யராஜ் மிகவும் உருக்கமாகவும், கோபமாகவும் ஒரு ஆடியோவை வெளியீட்டுள்ளார். இதில் ‘நீங்கள் நல்ல நண்பர்கள், காதலர் என பார்த்து தேர்ந்தெடுங்கள்.
விளையாட்டாக நீங்கள் எடுக்கும் புகைப்படங்கள் நாளை உங்கள் வாழ்வையே சீரழிக்கலாம், பெண் என்பவள் வேற்று கிரகவாசி இல்லை, இப்படி புகைப்படங்களை வெளியிடுவதன் மூலம் எத்தனையோ பேர் தற்கொலை செய்துக்கொள்கிறார்கள்.
இனியும் இதுப்போன்ற செயலை செய்ய வேண்டாம், இதை ஒரு பாதிக்கப்பட்ட பல பெண்களின் தகப்பனாக, நானும் கேட்டுக்கொள்கிறேன்’ என உருக்கமாக பேசியுள்ளார்.


Next

Related