பிரபல பாடகி சுசித்ரா தான் தற்போது கோலிவுட்டின் சென்சேஷன் டாக். இவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் செய்யும் அட்டகாசங்களுக்கு அளவே இல்லாமல் இருக்கின்றது.
தனுஷ், அனிருத், சின்மயி, சஞ்சிதா என பல பிரபலங்கள் பெயரை கெடுக்கும் வகையில் டுவிட் வர, சுசித்ரா என்னுடைய அக்கவுண்ட் ஹாக் செய்யப்பட்டு விட்டது என்று கூறினார்.
ஆனால், அவருடைய கணவர் சுசிக்கு மனநிலை சரியில்லை என்கின்றார், எதை நம்புவது என்று தெரியாமல் மக்கள் குழம்பி வருகின்றனர்.
இந்நிலையில் சுசித்ரா பெயரில் 50க்கு மேற்பட்ட போலி அக்கவுண்ட் உருவாகிவிட்டது, வழக்கம் போல் விஜய், அஜித் ரசிகர்கள் பகையை தீர்த்துக்கொள்ள சுசி பெயரில் சில கேவலமான விஷயங்களை செய்து வருகின்றனர்.
இளம் நட்சத்திரங்களை தான் இதுவரை தாக்கி வந்தனர், கமல்ஹாசன் போன்ற உச்ச நட்சத்திரங்கள் குறித்தும் தவறான தகவலை பரப்ப ஆரம்பித்துவிட்டனர்.
இதற்கு உடனடியாக சைபர் கிரைம் ஏதாவது முடிவெடுக்க வேண்டும், இல்லையெனில் பிரச்சனை விபரீதமாகிவிடும் என்பது மட்டும் உண்மை.