அஜித்தின் விவேகம் படத்தின் வேலைகள் தாறுமாறாக நடந்து வருகிறது. படமும் ஹாலிவுட் பட லெவலில் தயாராகி வருவதாக நிறைய செய்திகள் வருகின்றன.
இறுதிக்கட்ட படப்பிடிப்பு பணியில் சில பாடல்கள் படமாக்கப்பட இருக்கிறதாம். இதனை தொடர்ந்து படக்குழு இந்தியா திரும்பியதும் டீஸர் வெளியிடுவார்கள் என்றும் கூறப்படுகின்றன.
இந்நிலையில் இப்படத்தின் தமிழ்நாட்டு உரிமையை பிரபல நிறுவனம் ரூ. 50 கோடி கொடுத்து வாங்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த தகவல் மட்டும் உண்மையானால் ரஜினியின் 2.O படத்திற்கு பிறகு அதிக விலைபோகும் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.