Saturday, 11 March 2017

ஏன் மற்றவர்கள்... ரஜினி, அஜித்-விஜய் நாங்கள் சூப்பர்ஸ்ட்டர் என கூற என்ன சென்னார்?



தமிழ் சினிமாவில் இல்லை இந்திய சினிமாவிலேயே ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். இவர் படங்களின் வசூல் சாதனையை இவரே முறியடித்தால் உண்டு.

அப்படியிருக்க யார் அடுத்த சூப்பர் ஸ்டார்? என்பது பல வருடமாக போட்டி நடந்துக்கொண்டே வருகின்றது.

சமீபத்தில் லாரன்ஸ் மக்கள் சூப்பர் ஸ்டார் என தனக்கு தானே போட்டுக்கொண்டது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இந்நிலையில் சில வருடங்களுக்கு முன் அஜித் ‘நான் சூப்பர் ஸ்டார் இடத்திற்கு வருவேன்’ என்று கூறினார்.

விஜய் அந்த பட்டத்தின் மீது எத்தனை ஆசையில் உள்ளார் என்பதை நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை.

ஆனால், இதுக்குறித்து ஒரு பேட்டியிலேயே ரஜினியிடம் கேட்க ‘ஏன் மற்றவர்கள் வரக்கூடாதா?, ஒரு ஸ்டேஷனுக்கு மாஸ்டராக நான் உள்ளேன், எனக்கு பிறகு ஒருவர் அந்த இடத்திற்கு வந்து தானே ஆகவேண்டும், வந்தால் நல்லது தானே’ என பெருந்தன்மையாக கூறினார். அதான் சூப்பர் ஸ்டார்.


Next

Related