Saturday, 4 March 2017

ஜோதிகா தம்பியாக ஜி.வி.பிரகாஷ்குமார்?



பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் தற்போது தயாராகி வரும் புதிய படம் நாச்சியார். இந்த படத்தின் பஸ்ட் லுக் அண்மையில் வெளியான நிலையில், படத்தின் பூஜையும் சமீபத்தில் போடப்பட்டது.

இந்நிலையில் புரூஸ்லீ படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜி.வி. பிரகாஷிடம், நாச்சியார் படத்தில் என்ன வேடம், நீங்கள் ஜோதிகா தம்பியாக நடிக்கிறீர்களா என கேட்டுள்ளனர்.

அதற்கு ஜி.வி, ஜோதிகாவுக்கு தம்பியாக நான் நடிக்கவில்லை என்று கூறிய அவர், ஜோதிகா மிகச்சிறந்த நடிகை. அவர் ஒரு பாசிட்டிவ்வான நபர், அவர் மாதிரி ஒரு பாசிட்டிவ் நபர் இந்த படத்தில் நடிப்பது படத்திற்கு மிகப்பெரிய பலம் என்று அவர் கூறியுள்ளார்.


Next

Related