Saturday, 4 March 2017

ஸ்மார்ட்போனினை அதிக நாள் பாதுகாக்க?




இன்றைய நவீன உலகில் ஸ்மார்ட்போனும், இன்டர்நெட்டும் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது, அதேசமயம் வைரஸ்கள் மூலம் தகவல் திருடப்படுவதும் நடந்து வருகிறது.

ரஷ்யாவை சேர்ந்த இணைய பாதுகாப்பு நிறுவனமான கேஸ்பெஸ்கே லேப் நடத்திய மொபைல் வைராலஜி என்ற ஆய்வில், கடந்த 2016-ம் ஆண்டில் மட்டும் சுமார் 85 லட்சம் வைரஸ்கள் கண்டறியப்பட்டுள்ளது. இதில் 50 சதவீத புதிய வைரஸ்கள் இனம் காணப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில் 2016ம் ஆண்டும் அதற்கு முன்னரும் கண்டறியப்பட்ட ஸ்மார்ட் போன் வைரஸ்களைக் காட்டிலும் மும்மடங்கு அதிகமான வைரஸ்கள் கண்டறியப்பட்டுள்ளது.

இணையங்களில் வெளிவரும் விளம்பரங்கள் மற்றும் ட்ரோஜன் எனும் வைரஸ்கள் மூலம் இவை கண்டறியப்பட்டதாக ஆய்வில் கூறிப்பிடப்பட்டுள்ளது.

ட்ரோஜன் என்னும் வைரஸ்கள் தானாகவே குறிப்பிட்ட அப்ளிக்கேஷனை தரவிறக்கம் செய்து பாதிப்பினை ஏற்படுத்துகிறது.

மேலும் விளம்பரங்கள் வாயிலாகவும் ஸ்மார்ட் போனில் வைரஸ்கள் பாதிப்பினை ஏற்படுத்துகிறது

ஸ்மார்ட் போனைப் பாதுகாக்க
  • ஸ்மார்ட்போனில் Operating system எனும் OS-யை சரியாக அப்டேட் செய்வதன் மூலம் வைரஸ்களை தவிர்க்கலாம்.
  • பாதுகாப்பான இணையதளங்களை மட்டும் உபயோகிக்கலாம்.
  • ஸ்மார்ட் போனில் ஆன்டி-வைரஸ் போன்ற ஆப்களை உபயோகிக்கலாம்.
  • பாதுகாப்பற்ற இணையத்தளங்கள் மெயிலில் வந்தால் அதனை தவிர்க்கலாம்.


Next

Related