Saturday, 4 March 2017

துள்ளிக் குதித்து ஆடிய ஒபாமாவின் வீடியோ...!



அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான பராக் ஒபாமா சோகா பாட்டுக்கு மேடையில் துள்ளிக்குதித்து ஆடிய சம்பவம் வீடியோவாக வெளியேறி வைரலாக பரவி வருகிறது.

அமெரிக்காவின் முன்னாள் ஜனதிபதியான ஒபாமா, ஜனாதிபதி பதவிக்காலம் முடிந்ததைத் தொடர்ந்து பல்வேறு இடங்களுக்கு சுற்றுலாச்சென்று வருகிறார். அது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகி இணையத்தில் பரவின.

ஜனாதிபதியாக இருந்த காலக்கட்டங்களில் ஒபாமா அமெரிக்க மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்துள்ளார்.

இதன் காரணமாக பிரான்சில் நடக்கும் ஜனாதிபதி தேர்தலில் ஒபாமாவை ஜனதிபதிக்கான தேர்தலில் நிற்க வேண்டும் என்று பிரான்சில் ஒரு அமைப்பு விருப்பம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஒபாமா கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறித்த நிகழ்ச்சி ஒன்றில் மேடை மீது ஏறி சோகா பாட்டுக்கு துள்ளிக்குதித்து ஆடிய வீடியோ வை பலர் தங்களுடைய டுவிட்டரில் பதிவேற்றம் செய்துள்ளனர்.

மேலும் சிலர் ஒபாமா தன்னுடைய வாழ்க்கையை சிறப்பாக அனுபவித்து வருகிறார் என்றும் பதிவேற்றம் செய்துள்ளனர்.


Next

Related