Wednesday, 8 March 2017

விஜய் சேதுபதிக்கு அன்புக் கட்டளையிட்ட தல அஜித்













தல அஜித் எப்போதுமே கலைஞர்களை ஊக்கப்படுத்துவதில் பஞ்சமே வைக்க மாட்டார். அண்மையில் கூட அவர் சிவகார்த்திகேயனை தன் வீட்டிற்கு அழைத்து பாராட்டியது நம் அனைவருக்கும் தெரியும்.

இந்நிலையில் தல அஜித் விவேகம் படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு விஜய் சேதுபதியை அழைத்து பேசியிருக்கிறார். அங்கு விஜய் சேதுபதிக்கு அறுசுவை விருந்தும் அறிவுரையும் கிடைத்திருக்கிறது.

உன்னுடைய கதை தேர்வு நன்றாக இருக்கிறது, அந்த கவனம் மட்டும் கடைசி வரை இருக்க வேண்டும். உன்னுடைய தன்னம்பிக்கை எனக்கு பிடித்திருக்கிறது, அதோடு மற்றவர்களுக்கு உதவி செய்வதை நிறுத்திவிடாதே என்று அன்புக் கட்டளையிட்டிருக்கிறார்.


Next

Related