கோலிவுட்டே சுசிலீக்ஸ் கண்டு அச்சத்தில் உள்ளது. நான் அதை செய்யவே இல்லை, என் டுவிட்டர் பக்கம் ஹாக் செய்யப்பட்டுவிட்டது என அவரே கூறினார்.
ஆனால், அவருடைய கணவர் கார்த்திக், சுசிக்கு மனநிலை சரியில்லை என்று கூறி வருகிறார், இந்நிலையில் சமீபத்தில் இவர் ஒரு பேட்டியில் ‘நானும் என் கணவரும் பிரிய போகிறோம்.
மேலும், நான் மருத்துவமனையில் இல்லை, சென்னையில் தான் இருக்கிறேன், த்ரிஷா படத்தில் பாடல் பாடி வருகிறேன்.
ஒரு சில தினங்களுக்கு முன் நான் மருத்துவமனையில் இருந்தது உண்மை தான், என்னை வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள்’ என கூறியுள்ளார்.
இவை பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது, தற்போது இவர் சிகிச்சைக்காக லண்டன் செல்லவுள்ளதாக ஒரு செய்தி உலா வருகின்றது.