Saturday, 4 March 2017

சுசித்ரா கணவர் பரபரப்பு பேட்டி வீடியோ



பாடகி சுசித்ராவின் டிவிட்டர் ஐடியிலிருந்து பிரபல நடிகைகளின் ஆபாச வீடியோக்கள் வெளிவந்து பரபரப்பு ஏற்படுத்துவது குறித்து அவர் கணவர் நடிகர் கார்த்திக் விளக்கமளித்துள்ளார்.

பிரபல பாடகி சுசித்ரா டிவிட்டர் பக்கத்திலிருந்து நடிகைகள் சஞ்சிதா ஷெட்டி, அனுயா, திரிஷா போன்ற நடிகைகளின் ஆபாச புகைப்படங்கள் நேற்று வெளியாகி பரபரப்பை ஏற்ப்படுத்தியது.

சுசித்திரா டிவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது எனவும், அவர் வேண்டுமென்றே தான் இப்படி வெளியிடுகிறார் என கூறப்பட்டது.

இந்நிலையில் இதுகுறித்து சுசித்ராவின் கணவரும், நடிகருமான கார்த்திக் விளக்கமளித்துள்ளார்.

சுசித்ரா டிவிட்டர் ஐடியிலிருந்து வெளியான பதிவுகளில் மோசமாக சித்தரிக்கப்பட்டவர்கள் என்னிடம் வந்து விளக்கம் கேட்டு மிகுந்த புரிதல் உணர்வுடன் செயல்பட்டார்கள்.

அவர்களிடம் நான் கூறியது உணர்வெழுச்சி நிலையில் உள்ளதன் வெளிப்பாடே அந்தப் பதிவுகள்.

இதில் தனிப்பட்ட பகையெதுவும் இல்லை, உணர்ச்சிவயப்பட்ட மனநிலையில் பதிவு செய்யப்பட்டவை என்பதை அவர்கள் புரிந்துகொண்டுள்ளார்கள்.

சுசித்ரா நிலைமையை சரிசெய்ய நாங்கள் முயற்சித்து வருகிறோம், சூழலை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும் என கேட்டுக் கொள்வதாக கூறியுள்ளார்.


Next

Related