Thursday, 6 April 2017

சீமான் மற்றும் ஜி வி பிரகாஷ் குமார் சேர்ந்து கோபம்



நடிகர் ஜி.வி.பிரகாஷ் பல படங்களை கையில் வைத்து கொண்டு மிகவும் பிசியாக இருக்கிறார். இதில் அடங்காதே, சர்வம் தாள மயம், நாச்சியார், செம, ஐங்கரன், குப்பத்து ராஜா என பல படங்களில் கமிட்டாகியுள்ளார்.

மேலும் வெற்றிமாறன், எழில் ஆகியோரின் இயக்கத்திலும் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் அவர் அரசியல் தலைவர் சீமான் இயக்கத்தில் நடிக்கப்போவதாகவும் அப்படத்திற்கு கோபம் என பெயரிடப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் சீமான் விஜய் ஆண்டனியை வைத்து பகலவன் படத்தை இயக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் இது அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை என தெரிகிறது.


Next

Related