Thursday, 6 April 2017

பெரிய இயக்குனர் கூப்பிட்டும் தனது மகனை நடிக்க வைக்க மறுத்த ஜெயம்ரவி



சித்திக் இயக்கத்தில் மம்முட்டி, நயன்தாரா நடிப்பில் மலையாளத்தில் வெளியான படம் பாஸ்கர் தி ராஸ்கல். ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்ற இப்படத்தை தமிழ், தெலுங்கு மொழிகளில் ரீ-மேக் பண்ண இருப்பதாகவும், அவற்றை தானே இயக்கவிருப்பதாக கூறி வந்தார் இயக்குநர் சித்திக். தமிழ் ரீமேக்கில் மம்முட்டி வேடத்தில் ரஜினி நடிப்பதாக எல்லாம் சொல்லப்பட்டு, தற்போது அரவிந்த்சாமி நடிக்க இருப்பது உறுதியாகியுள்ளது.

கதாநாயகியாக அமலா பாலும், குழந்தையாக நைனிகாவும் நடிக்கின்றனர். தெறி படத்தைத் தொடர்ந்து மீனாவின் மகள் நைனிகா நடிக்க உள்ள படம் இது. இந்தப்படத்தில் அரவிந்த்சாமி மகனாக ஜெயம் ரவியின் மகன் ஆரவ்வை நடிக்க வைப்பதற்கு கேட்டனர். ஆனால் ஜெயம் ரவி மறுத்துவிட்டார்.

அந்த வேடத்தில் நடிக்க தற்போது நடிகர் ஸ்ரீகாந்தின் மகனை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பாஸ்கர் தி ராஸ்கல் படத்தின் பூஜை கொச்சியில் நடைபெற்றது. இதில் அரவிந்த்சாமி, அமலா பால் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.


Next

Related