Thursday, 6 April 2017

ஏஏஏ-வில் சிம்புவுக்கு நான்கு வேடங்கள் இல்லை



திரிஷா இல்லனா நயன்தாரா என்ற ஆபாசமான படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன், சிம்பு உடன் இணைந்துள்ள படம் ஏஏஏ. அன்பானவன் அடங்காதவன் அசராதவன் என தலைப்புக்கு அர்த்தம் சொல்லும் இந்தப் படத்தில் சிம்பு 3 வேடங்களில் நடிப்பதாக சொல்லப்பட்டது. அதன்பிறகு நான்கு வேடங்களில் நடிப்பதாக சொல்லப்படுகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு 60 சதகிவிகதம் முடிவடைந்த நிலையில் தயாரிப்பாளருக்கும், ஹீரோவுக்கும் இடையில் பிரச்சனை ஏற்பட்டதால் பட வேலைகள் முடங்கிக்கிடக்கிறது. இதற்கிடையில், சிம்புவின் இரு வேடங்களுக்கான டீஸர் ஏற்கனவே வெளிவந்துவிட்டது. ஏஏஏ படத்தில் ஸ்ரேயா, தமன்னா, ஆகியோர் கதாநாயகிகளாக நடித்து வருகின்றனர்.

சமீபத்தில் நீது சந்திராவையும் அண்மையில் கமிட் செய்தனர். இந்நிலையில் தற்போது சிம்புவின் நான்காவது வேடத்திற்காக சனா கான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. இவர் சிலம்பாட்டம் படத்தில் சிம்புவுடன் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது. இன்னொரு தகவலாக... சிம்புவுக்கு நான்கு வேடங்கள் இல்லை. அது ஒரு பாடல் காட்சிக்கான கெட்டப் என்றும் சொல்கின்றனர்.


Next

Related