Friday, 7 April 2017

பிரபல சின்னத்திரை நந்தினி பற்றிய திடுக்கிடும் தகவல்



பிரபல சின்னத்திரை நடிகையான நந்தினியின் கணவர் கார்த்திகேயன் சமீபத்தில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

அவர் தற்கொலைக்கு நந்தினி தான் காரணம் என்று கார்த்திக்கின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றம் சாட்டினர்.

ஆனால் இதற்கு நந்தினி கார்த்திக் வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்தார், அப்பெண் தற்கொலை செய்து கொண்டார் மற்றும் பல லட்சம் கடன் வாங்கி பல பேரை ஏமாற்றியுள்ளார் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் கார்த்திக்கின் தாயார் கூறுகையில், கார்த்திக்கை நந்தினி காதலித்த போது அவர் ஒரு நடிகை என்று தங்களுக்கு தெரியாது என்றும் திருமணத்திற்கு முன்பே தங்கள் வீட்டில் நந்தினி தங்கி வந்தாள் என்று கூறியுள்ளார்.

தனக்கு அபார்ஷன் ஏற்பட்டதாக, நந்தினியே தன்னிடம் கூறியதாகவும், வெண்ணிலா என்ற பெண்ணை கார்த்திக் காதலித்தது நந்தினிக்கு தெரியும் எனவும், அப்பெண் தற்கொலைக்கு நந்தினியும் ஒரு காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த வழக்கில் நந்தினிக்கு எந்த ஒரு பிரச்சனையும் வந்து விடக் கூடாது என்பதற்காகத்தான் கார்த்திக் சிறைக்கு சென்றான்.

தன் மகனை நந்தினி மிரட்டி தான் திருமணம் செய்தாள், கார்த்திக் கடன் வாங்கியது உண்மை தான், ஆனால் 1 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் தான தவிர, நந்தினி கூறுவது போல், பல லட்சங்கள் கிடையாது.

நந்தினிக்கு நடனம் மிகவும் பிடிக்கும், இதனால் இருவரும் பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்திய ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டனர். அப்போது கார்த்திக்கிற்கு காலில் காயம் ஏற்பட்டது. அதன் பின் நந்தினியின் நடவடிக்கை முற்றிலும் மாறிவிட்டது என்று கூறியுள்ளார்.

ஆனால் இதற்கு நந்தினி பதில் அளிக்கையில், இவை அனைத்தும் பொய் என்றும் வெண்ணிலாவின் தற்கொலைக்கு நான் தான் காரணம் என்றால் பொலிசார் ஏன் என் மீது வழக்கு தொடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர்கள் வேண்டுமென்றே தன் மீது குற்றம் சாட்டுகின்றனர் என்று நந்தினி கூறியுள்ளார்.


Next

Related