சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க ரெடியாகி வருகின்றார். இவர் இப்படத்திற்கான போட்டோஷுட்டில் சமீபத்தில் தான் கலந்துக்கொண்டார்.
இதில் வித்யாபாலன் ஹீரோயினாக நடிக்கவுள்ளதாக கிசுகிசுக்கப்பட்டது, ஆனால், தற்போது வந்த தகவலின்படி பாலிவுட் நடிகை ஹுமா குரேசி நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இவர் இதில் ஜோடியா? என்று தெரியவில்லை, பாலிவுட் மீடியாக்கள் இதை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
தமிழ் மீடியாக்கள் ஏதும் இதை உறுதிப்படுத்தவில்லை, ரஜினி தரப்பிலிருந்து செய்தி வரும் வரை எதுவும் அதிகாரப்பூர்வம் இல்லை.