விக்ரம் நடித்த சாமி படம் ரசிகர்கள் விரும்பிய ஒரு படம். விக்ரமிற்கு ஒரு மாஸ் வரவேற்பு கொடுத்த படம் என்றே சொல்லலாம். இந்த படத்தின் இடண்டாம் பாகம் தயாராக இருப்பதாக இயக்குனர் ஹரி ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
அதில் இருந்தே ரசிகர்கள் இப்படத்திற்காக ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர். அண்மையில் தான் படத்தின் நாயகிகளாக கீர்த்தி சுரேஷ் மற்றும் திரிஷா நடிக்க இருப்பதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் சாமி 2 படத்திற்கு இசையமைப்பாளராக தேவி ஸ்ரீ பிரசாத் கமிட்டாகியுள்ளாராம். இந்த தகவலை அப்பட தயாரிப்பாளர் சிபு தமீன்ஸ் தன்னுடைய டுவிட்டரில் கூறியுள்ளார்.