விஜய், ஏ.ஆர். முருகதாஸ் இருவரும் மீண்டும் எப்போது கூட்டணி அமைப்பார்கள் என்று ரசிகர்கள் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கின்றனர்.
அதேசமயம் விஜய்யின் 62வது படத்தை முருகதாஸ் இயக்க இருக்கிறார் என்றும் அப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.
ஆனால் இதுவரை பட செய்தி குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. இந்த நிலையில் விஜய், முருகதாஸ் படத்தை லைகா நிறுவனத்துக்கு பதிலாக சன் பிக்சர்ஸ் தயாரிக்க முன் வருவதாக கூறப்படுகிறது.
இதற்கு முன் சன் பிக்சர்ஸ் விஜய்யின் இரண்டு படங்களை தயாரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.