Thursday, 18 May 2017

அஜித் வீட்டு வாசலில் 3 மணி நேரம் காத்திருந்தேன், தல-க்கே ஆப்பா? ப்ரேமம் இயக்குனர் சூப்பர் தகவல்



ப்ரேமம் படத்தின் மூலம் ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களையும் கவர்ந்து இழுத்தவர் அல்போன்ஸ் புத்ரன். இவர் இயக்கத்தில் தமிழில் நேரம் படம் வெளிவந்து சூப்பர் ஹிட் ஆனது.

இந்நிலையில் பேஸ்புக் தளத்தில் ரசிகர் ஒருவர் நீங்கள் விரைவில் அஜித்தை வைத்து ஒரு படம் இயக்கவேண்டும் என்று விரும்புகிறேன் என்று கூறினார்.

அதற்கு அல்போன்ஸ் ‘நானும், என் நண்பனும் சென்னையில் படிக்கும் போது அவர் வீட்டு வாசலில் 3 மணி நேரம் காத்திருந்தோம்.

இன்று வரை அவரை பார்க்க முடியவில்லை, கண்டிப்பாக அவருக்காக ஒரு கதையை தயார் செய்வேன்’ என்று கூறியுள்ளார். இதுமட்டுமின்றி அஜித்திற்காக ’ஆப்பு’ என்ற கதையை ரெடி செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.


Next

Related