பாகுபலி 2 உலகில் பல இடங்களில் வெளியாகி மிகப்பெரும் சாதனை படைத்துள்ளது. படத்திற்கு இன்றும் பல இடங்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
ரூ. 1000 கோடியை தாண்டி வசூல் சாதனை செய்து காட்டியுள்ளார் இயக்குனர் ராஜமௌலி. சினிமா பிரபலங்கள் பலரும் இப்படம் பற்றிய தங்களது கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.
ஏற்கனவே இப்படத்தை வீட்டில் பார்த்துவிட்டு ட்விட்டரில் தனது கருத்தை தெரிவித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களோடு கூட்டத்தில் பார்க்கவேண்டும் என விரும்பி தியேட்டரில் இப்படத்தை மீண்டும் பார்த்தாராம்.
அங்கிருந்தவர்கள் பலருக்கும் அவரை அடையாளம் தெரியவில்லையாம்.