Tuesday, 16 May 2017

ராஜமௌலியின் அடுத்த ஹீரோ! அதிர்ஷ்டம் யாருக்கு ..?



இயக்குனர் ராஜமௌலி இன்று தெலுங்கு சினிமாவில் மட்டுமல்ல, அனைத்து மொழி சினிமாவிலும் மிக முதன்மையான இயக்குனர் ஆகிவிட்டார்.

பாகுபலி 2 மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து அதன் அடுத்த பாகத்தை அவர் இயக்கலாமே என்பது தான் பலரின் எண்ணம். ஆனால் அவர் என்ன செய்யப்போகிறார் என்பது தான் சர்ப்ரைஸ்.

பாகுபலிக்காக 5 வருடங்களை ஒதுக்கிய அவர் சிறு ஓய்வுக்காக வெளிநாடு செல்ல திட்டமிட்டிருக்கிறாராம். பின் மீண்டும் அடுத்த படத்திற்கான கதையை தயார் செய்வதில் இறங்கலாம் என முடிவில் உள்ளாராம்.

ஆனால் அவரின் அடுத்த படத்தில் நடிக்க நான், நீ என போட்டி போட்டு தூது அனுப்புகிறார்களாம். யாராக இருந்தாலும் கதை ரெடியான பின்னர் தான் ஹீரோ, ஹிரோயின் தேர்வு செய்யப்படும் என்பதில் உறுதியாக இருக்கிறாராம் ராஜமௌலி.


Next

Related