கடந்த 3 நாட்களாக உலகத்தை கதிகலங்க வைத்து வருபவர்கள் ரான்ஸ்சம் திருடர்கள். Wannacry என்ற வைரஸ் மூலம் கணினியை முடக்கி பணம் கொடுத்தால் தான் விடுவிப்போம் என்று உலகம் முழுவதும் மிரட்டி வருகின்றனர்.
தற்போது இவர்கள் கைவைத்திருப்பது ஹாலிவுட்டின் டிஸ்னி நிறுவனத்திடம் தான். வசூலில் சக்கை போடு போடும் திரைப்படம் பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன். தற்போது 230 மில்லியன் டாலர் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இதன் ஐந்தாவது பாகம் இந்த மாதம் 16ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவிருந்தது. ஆனால் இப்படத்தின் பிரதியை ஹாக்கர்கள் முடக்கிவிட்டார்களாம். பெருந்தொகையை கேட்டு மிரட்டியுள்ளார்களாம்.
ஆனால் டிஸ்னி நிறுவனம் இதை தர தயாராக இல்லையாம். அவர்கள் அமரிக்க போலிஸின் உதவியோடு இதற்கு முடிவு கட்டும் எண்ணத்தில் இருக்கிறார்களாம்.
2003ம் ஆண்டிலிருந்து இதுவரை பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் படங்கள் 3.72 பில்லியன் அமெரிக்க டாலர்களை சம்பாதித்து கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.