ஜெயம் ரவி, சயீஷா, தம்பி ராமையா நடித்துள்ள வனமகன் படம் வரும் வெள்ளிக்கிழமை வெளிவரவுள்ளது. படக்குழு தற்போது படத்தை ப்ரொமோட் செய்வதில் கவனம் செலுத்தி வருகிறது.
இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த ஜெயம் ரவி, "வனமகன் தான் என் கேரியரில் பெரிய ஆக்ஷன் படமாக இருக்கும். சினிமாவை நேசிக்கும் இயக்குனர் விஜய் போன்ற ஒருவரால் தான் இப்படிப்பட்ட ஒரு படம் எடுக்கமுடியும்."
"வனமகன் பெரிய ஹிட்டாகும். போட்ட பணத்தை விட அதிகம் வரும் என நம்புகிறேன். அப்படி ஒருவேளை எதாவது நடந்தால் நான் ஒரு ரூபாய் கூட வாங்காமல் உங்களுக்கு ஒரு படம் நடித்து கொடுக்கிறேன்" என கூறியுள்ளார்.
பிறகு "ஷேர் செய்து படத்தை தயாரித்து சரிகட்டிவிடுவோம். என் வண்டியும் ஓடணும் இல்ல" என காமெடியாக கூறினார் ஜெயம் ரவி.