திருச்சி மாவட்டத்தில் பல நூற்றாண்டுகளாக காவிரி நதிக்கரையில் அமைந்துள்ள ஸ்ரீரங்கம் கோவிலில், பக்தர்களின் வழிபாடுகள் மிகவும் சிறப்பானது.
உலகெங்கிலும் உள்ள இந்துக் கோயில்களுள் பெரிய அளவில் செயல்படும் கோவிலாக நம்பப்படும் இக்கோயில் சுமார் 631,000 சதுர அடியில், 4 கி.மீ. அல்லது 10,710 அடி சுற்றளவில் கட்டப்பட்டுள்ளது.
ஸ்ரீரங்கமானது, மகாவிஷ்ணுவின் எட்டு முக்கிய திருத்தலங்களுள் முதல் திருத்தலமாகக் கொண்டாடப்படும் தனிப்பெருமை வாய்ந்ததாகும்.
ஸ்ரீரங்கம் கோவிலால் ஏற்பட்ட இறப்புகளின் காரணம்?
ஸ்ரீரங்கம் கோவிலால் ஏராளமானோர் தங்களின் இன்னுயிரை இழந்துள்ளனர். அதற்கு அந்த கோவிலின் பக்தர்கள் சில மர்மக் கதைகளை கூறுகின்றனர்.
அதாவது, அலாவுதீன் கில்ஜி எனும் மன்னன் தென்னகத்தே புகுந்து அனைத்து கோவில்களையும் அதன் செல்வங்களையும் அனுபவிக்கத் துணிந்து, அவன் படைகளை அனுப்பி அனைத்தையும் கவர ஆணையிட்டான்.
அப்போது தான் ஸ்ரீரங்கம் எனும் அற்புத தீவு அவன் கண்ணுக்கு புலப்பட்டது. அந்த கோவில் மீது ஒரு கண் வைத்திருந்த மன்னன் தக்க சமயம் பார்த்து, அந்த கோவிலின் நகைகளை கொள்ளை அடித்துச் சென்றுவிட்டான்.
கொள்ளை அடிக்கப்பட்ட பொருட்களில் எதையும் விரும்பாத அந்த மன்னனின் மகள், கொள்ளை அடிக்கப்பட்ட நகைகளுடன் கூடிய பெருமாளின் சிலை மீது மட்டும் அதிக ஆசை வைத்திருந்தாள்.
அதனால் அந்த இளவரசி தன்னருகே பெருமாள் சிலையை ஒரு பொம்மை போல வைத்து விளையாடி வந்துள்ளதாக கூறுகின்றனர்.
பின் ஸ்ரீரங்கத்தில் உள்ள மக்கள், ஆடல் பாடல் கலைகளில் நல்ல அறிவு கொண்டிருந்த அந்த அலாவுதீன் கில்ஜி மன்னனை சந்தித்து, ஆடல் பாடல் மூலம் பரிசாக அந்த பெருமாள் சிலையை மீட்டனர்.
அதனால் கோபம் கொண்ட அந்த இளவரசி, நேரடியாக யானை மீது அமர்ந்து ஸ்ரீரங்கம் சென்று அங்கேயே உயிர் விட்டாள்.
மீண்டும் படையெடுக்க வந்த மன்னர் படைக்கு அஞ்சாமல், பாதிபேர் நேருக்கு நேராக மோதி, சிலையை கொண்டு சென்றனர்.
அதனால் அலாவுதீன் கில்ஜி மன்னர் அந்த ஊரையே அழிக்குமாறு உத்தரவிட்டதால், அவரின் படைகள் அந்த ஊர் மக்களை வெட்டி சாய்த்தனர்.
இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். அதன் பின் 40 ஆண்டுகளுகள் கழித்து, அந்த சிலை ஸ்ரீரங்கத்தை அடைந்ததாக கூறுகின்றனர்.