Wednesday, 27 September 2017

10 லட்சத்தை எடுத்துக் கொண்டு வெளியேறுகிறாரா பிந்து மாதவி?...


இன்னும் சில தினங்களில் இறுதிக்கட்டத்தினை எட்டும் பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

நேற்றைய நிகழ்ச்சியின் இறுதியில் பிக்பாஸ் 10 லட்சம் ரூபாயினை வைத்துள்ளனர். இதனை யாருக்கு வேண்டும் என்றாலும் எடுத்துக்கொள்ளலாம்.

இந்த ரூபாயை எடுக்கும் நபர் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற வேண்டும் என்றும் கூறியுள்ளனர். அதன் முடிவில் பிந்து மாதவி இந்த ரூபாயை எடுத்துக் கொண்டது போல் காட்சி வெளியாகியுள்ளது.

மேலும் இன்று வெளியான ப்ரொமோவில் அனைவரது பேச்சும் அந்த 10 லட்சம் ரூபாயைப் பற்றியே உள்ளது. கடைசியில் 10 லட்சம் ரூபாயை யார் எடுக்கப் போகிறார்கள்?... அல்லது யாரும் எடுக்காமல் தொடர்ந்து வீட்டிற்குள் இருக்கப் போகிறார்களா?.. என்பதை இன்றைய நிகழ்ச்சியில் பொருத்திருந்து பார்ப்போம்.


Next

Related