Friday, 6 October 2017

இளமைக்கு ஆசைப்பட்டு இந்த நடிகை செய்த காரியம்!



ஜேர்மனியைச் சேர்ந்த 48 வயது நடிகை மானோஷ் தனது இளமை தோற்றத்தினை தக்க வைத்துக் கொள்ள 35 லட்சம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பக்டீரியாவை தன் உடலினுள் செலுத்தியுள்ளார்.

Bacillus F எனும் 35 லட்சம் ஆண்டுகளுக்கு முன் உருவான பக்டீரியாவை ரஷ்ய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த பக்டீரியாவை 2015-ம் ஆண்டு வரை வைத்து ஆராய்ச்சிகள் செய்யப்பட்டது.

இந்த ஆராய்ச்சியின் மூலம் Bacillus F எனும் பக்டீரியா இளமையை நீண்ட காலம் தக்க வைத்துக் கொள்ளும் ஆற்றல் மற்றும் ஆயுட்காலத்தை நீடிக்கும் ஆற்றலையும் கொண்டுள்ளது என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.

இதை அறிந்த நடிகை மானோஷ் தன் உடலில் பக்டீரியாக்களை செலுத்த முடிவு செய்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், எனக்கு சிறுவயதில் இருந்தே முதுமை மீது வெறுப்பு வந்து விட்டது.

நான் மட்டும் முதுமை அடைந்து விடக் கூடாது என்று எண்ணி கடந்த 20 ஆண்டுகளில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யாத உறுப்புகளே இல்லை.
மூக்கில் 2, உதட்டில் 2, மார்பகங்களில் 6 என்று ஏராளமான அறுவை சிகிச்சைகளுக்காக பல லட்சங்கள் செலவிட்டு செய்திருக்கிறேன்.

சமீபத்தில் ரஷ்ய விஞ்ஞானிகள் கண்டுபிடித்த Bacillus F எனும் பாக்டீரியா சிகிச்சை பற்றி கேள்விப்பட்டேன்.

உடனே அதைச் செய்து கொள்ள முடிவெடுத்து, அவர்களை தொடர்பு கொண்டு தனது உடலில் பக்டீரியாவைச் செலுத்த சம்மதம் தெரிவித்தேன்.

ஆனால் அதற்கு ஆராய்ச்சியாளர்கள், என் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மறுப்பு தெரிவித்தனர்.

ஒரு சில மருத்துவர்களின் மேற்பார்வையில் அவரே 2 வாரங்களுக்கு ஒருமுறை எனது உடலில் பக்டீரியாவை செலுத்தினேன்.

அதன் பின் 3 மாதங்களில் அவரின் உடலில் மாற்றம் தெரிய ஆரம்பித்தது. அதாவது அவரின் தோல் குழந்தையின் தோல் போன்று மென்மையானது.

அதோடு என் முகத்தில் தழும்புகள், கோடுகள் என்று அனைத்துமே மறைந்து விட்டது. ஆனால் தூக்கமின்மை பிரச்சனை ஏற்பட்டது.

இந்த பக்டீரியா ஒருவேளை எனக்கு நீண்ட காலத்திற்கு வெற்றியைத் தரவில்லை என்றாலும் பரவாயில்லை. ஏனெனில் இந்த பக்டீரியா என்னுடைய ஆயுளை 80, 90 வயது வரை நீட்டிக்கும்.

அதனால் நான் சாகும் வரை என் உடலின் அனைத்து பாகங்களும் வேலை செய்யும் என்று நடிகை மானோஷ் கூறியுள்ளார்.


Next

Related