Sunday, 8 October 2017

பறவை முனியம்மாவிற்கு ஏற்பட்ட பரிதாப நிலை...



நடிகர் விக்ரம் நடித்த தூள் படத்தில் சிங்கம் போல நடந்துவரான் பாடல் மூலம் அறிமுகமானவர் பறவை முனியம்மா.

இவர் சுமார் 50 படங்களுக்கு மேல் தமிழ் சினிமாவில் நடித்துள்ளார். மேலும் சுமார் 2000 மேடை நிகழ்ச்சிகளில் நடித்துள்ளார். இவர் வயதானாலும் சினிமாவில் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை மற்றவர்களுக்கு கொடுத்தவர்.

இவர் கடைசியாக சிவகார்த்திகேயனுடன் மான் கராத்தே படத்தில் நடித்துள்ளார். அதன் பிறகு இவர் எங்கு இருக்கிறார் என்ன ஆனார் என்பது பற்றி யாருக்கும் தெரியாமல் இருந்தது.

பறவை முனியம்மா தற்போது தைராய்டு நோய்யால் பாதிக்கப்பட்டு அவரது மகள் வீட்டில் உள்ளார். இவருடைய மகள் இவரை பார்த்து கொள்வதாகவும், இவரது மருமகன் தான் மருத்துவ செலவுகளை பார்த்துக் கொள்கிறாராம்.

சில வருடத்துக்கு முன்னர் பறவை முனியம்மாவுக்கு நடிகர் தனுஷ் மற்றும் விஷால் போன்றவர்கள் இவருக்கு பண உதவியை செய்துள்ளனர்.

பறவை முனியம்மா என்றால் தெரியாதவர் யாருக்கும் இருக்க முடியாது. ஆனால் இவர் தற்போது உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளார்.


Next

Related