விஜய் டிவியில் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சி மக்கள் மனதில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிகழ்ச்சியில் சினேகன் தான் வெற்றி பெறுவார் என மக்கள் அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அவர் ஆரவ் முதம் இடம் பிடித்து பரிசை தட்டி சென்றார்.
இந்நிலையில் பிக்பாஸில் இரண்டாம் பிடித்த சினேகனுக்கு இதுவரை எவ்வித பரிசுதொகையும் அவருக்கு வழங்கவில்லை.
இது பற்றி சினேகன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது. பிக்பாஸ் வீட்டில் நூறு நாள் இருந்தது என்னுடைய முதல் வெற்றி. வெற்றி பெற்றால் அந்த பணத்தை கொண்டு நூலகம் கட்டலாம் என நினைத்தேன்.
என்னுடடைய அம்மா அப்பா பெயரில் நூலகம் அமைய வேண்டும் என்பது என்னுடைய ஆசை. இதன் மூலம் லட்சக்கணக்கான மாணவர்கள் பயனடைவார்கள். நான் வெற்றி பெற்றிருந்தால் இந்த செய்தியினை மேடையிலே அறிவித்து இருப்பேன்.
நான் தோற்று போனதற்கு காரணம் தெரியவில்லை. மக்களுடைய தீர்ப்பை ஏற்றுகொள்கிறேன். நூலகம் திறப்பதற்கான தேதியை பற்றி யோசித்துவிட்டேன். இந்த திட்டத்தை நான் கைவிடவில்லை என அவர் தெரித்துள்ளார்.