திருமண வாழ்க்கையில் ஒரு ஆணும் பெண்ணும் தங்கள் துணையை தேர்வு செய்வதில் அதிக கவனம் செலுத்துவது உண்மைதான்.
அதில் பல காரணங்கள் அவர்களை திருப்தி படுத்தியிருக்கும். அதே சமயம் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும் முடிவெடுப்பதும் மிக முக்கியம்.
அந்த வகையில் ஆண் தன்னை விட வயதில் மூத்த பெண்ணை திருமணம் செய்தால் ஏற்படும் சில பிரச்சனைகளை பார்க்கலாம்:
திருமண வாழ்வில் தாம்பத்தியம் என்பது இன்றியமையாத ஒன்று. பெண்களுக்கு பொதுவாக தாம்பத்தியம் மீது ஏற்படும் ஈடுபாடு அவர்களின் மாதவிடாய் நிற்கும் வரை மட்டுமே இருக்கும் அதன் பின் குறைய தொடங்கும். இதனால் ஒரு குறிப்பிட்ட வயதை தாண்டி அவர்களுக்கு தாம்பத்தியம் மீது ஆசைகள் இருக்காது.
ஆனால் ஆண்களுக்கு தங்கள் 80 வயது வரை உறவில் ஈடுபட விரும்புவர். இப்படி மனைவிக்கு நாட்டம் குறையும்பொழுது கணவன் தவறான வழியில் செல்ல வழி வகுக்கும்.
இது இயற்கையின் செயல்பாடு. தன்னை விட மூத்த பெண்ணை திருமணம் செய்யும் ஆண்கள் தங்கள் மனைவியிடம் சில காலங்கள் வரைதான் உறவில் ஈடுபட முடியும்.
மேலும் காலங்கள் செல்ல செல்ல வெளித்தோற்றமானது மூத்த வயதுடையவள் என்று சுலபமாக காட்டி கொடுத்துவிடும். இது நடைமுறையில் சில மன உளைச்சலுக்கு காரணமாகலாம்.
மேலும் வயதில் மூத்த பெண்ணை திருமணம் செய்தால், கணவனை விட மனைவி சீக்கிரம் மரணிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
இதனால், தள்ளாத வயதில் அவன் தனித்துவிடப்படும் நிலைகள் ஏற்படும். இதை தெளிவாக உணர்ந்து திருமண முடிவெடுத்தால் பின்காலத்தில் பிரச்னை இல்லை.