Wednesday, 22 November 2017

தாடி பாலாஜியின் மனைவி!! மாற்றத்தின் பின்னர் அம்பலப்படுத்திய உண்மைகள்..?



தாடி பாலாஜியின் மனைவி என்றால் எல்லோருக்கும் சோகமான ஒரு முகம்தான் கண்முன் வரும். ஆனால், தற்போது அவருக்குள் உள்ள திறமைகள் வைரலாக தொடங்கியுள்ளது.

இதுவரை சாதாரணக் குடும்ப பொண்ணாவே வாழ்ந்து வந்த அவருக்குள் இப்படி ஒரு திறமையா... என்று வியந்து போயுள்ளனர் பார்ப்பவர்கள் அனைவரும்.

பெண் பெண் தொழில்முனைவோர் தினத்தை முன்னிட்டு ஃபேஷன் ஷோ நடைபெற்றது.

இதில் பங்கேற்ற ஒருவர் மட்டும் நம்மை அதிகமாகக் கவர்ந்தார். அவர், கடந்த ஓராண்டாகத் தொடர்ந்து செய்திகளில் அடிபட்டு வந்த நித்யா. நடிகர் தாடி பாலாஜியின் மனைவி. அழு மூஞ்சியுடன் காட்சியளிக்கும் அவர் இப்போது ஆளே மாறியிருந்தார்.

ரொம்ப நாளா கணவர், குழந்தைனு சாதாரணக் குடும்ப பொண்ணாவே வாழ்ந்துட்டேன்.

சமூக சேவையில் அதிக ஆர்வம் இருந்ததால NGO ஆரம்பிக்கலாம்னு ஐடியா. அப்படி ஆரம்பிச்சதுதான் 'WE - Women Endeavor ' அமைப்பு.

இது முற்றிலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் முன்னேற்றத்துக்கான அரசு சாரா அமைப்பு.

அதுமட்டுமில்ல 'தி பீ ஸ்கூல் (The Bee School) எனும் குழந்தைகள் விளையாட்டு பாடசாலை, 'கேட்ச் என்டெர்டெய்னர்ஸ் (Catch Entertainers) எனும் நிகழ்ச்சி மேலாண்மை அமைப்பும் தொடங்கியிருக்கேன்.

சமூக ஆர்வலரான எனக்கு முற்றிலும் பக்கபலமாக இருப்பது என் தந்தை. சமீபத்தில் கசிந்த என் மணவாழ்வின் கசப்பான பக்கங்கள்தான் எல்லாருக்கும் தெரியும்.

ஆனால், என்னுள் இருக்கும் மறுபக்கத்தை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த Wei - Fa அமைப்புக்கு நன்றி.

என் மகள் போஷிகாவுடன் என் வாழ்க்கை சந்தோஷமா இருக்கு. 'சிங்கிள் மாம் (Single Mom)' என்பதில் பெருமிதம் கொள்கிறேன்" என்று கூறியவர் 'ஸ்மைலிங் ஃபோட்டோ போடுங்க ப்ளீஸ்' எனப் புன்னகைத்தார்.


Next

Related