லேடி சுப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் அனைத்து படங்களுமே பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளையே தேர்ந்து எடுத்து நடித்து ஹிட் கொடுத்துவருகிறார்.
இந்நிலையில் நயன்தாரா அடுத்து நடித்து வரும் ஒரு படத்தில் பிரபல தொகுப்பாளர் ஜாக்குலினும் நடிக்கின்றார்.
நயந்தாராவிற்கு தங்கையாக நடித்துக்கொண்டிருக்கும் ஜாக்குலின் முதன் முறையாக செட்டிற்கு செல்லும் போது நயன்தாராவை பார்த்து பேசலாமா வேண்டாமா என யோசித்துள்ளார்.
ஆனால் நயன்தாரா ஜாக்குலினை பார்த்ததும் ”ஹாய் ஜாக்குலின் எப்படி இருக்கீங்க” என்று கேட்டுள்ளார். இதனால் ஜாக்குலின் ஷாக் ஆகிவிட்டாராம்.
அதை தொடர்ந்து மேடம் என்னை உங்களுக்கு தெரியுமா என்று ஜாக்குலின் கேட்டார். அதற்கு நயன்தாரா நீங்கதான விஜய் டிவியில் இருக்கீங்க என்று கூறி மேலும் ஷாக் ஏற்றினாராம்.