பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களின் கோபத்தினை சம்பாதித்த ஜுலிக்கு நெகட்டிவ் பப்ளிசிட்டியே கிடைத்தது. ஆனால் இந்த பப்ளிசிட்டி அவரின் புகழை பல மடங்கு உயர்த்தியுமுள்ளது.
தற்போது பிரபல ரிவியில் தொகுப்பாளினியாக சென்றுள்ளார் ஜுலி. இவர் இந்நிகழ்ச்சியில் சென்ற முதல் நாளிலிருந்து தனது வாயை அடக்கிக் கொள்ளவில்லையாம். கலா மாஸ்டரை எரிச்சலூட்டும் விதமாகவே பேசியுள்ளார்.
அந்த ரிவியில் வேலை செய்யும் தொழில்நுட்ப கலைஞர்கள் பலரும் ஜுலிக்கு அறிவுரை கூறியும் அவர் கேட்கவில்லையாம்.
சமீபத்தில் கூட கலா மாஸ்டருக்கு நிகராக நடனமாட நினைத்த ஜுலி அவருடன் ஆடி அவரை அவமானப்படுத்தியுள்ளார். இதிலும் பார்வையாளரின் வெறுப்பினை சம்பாதித்தார்.
இதை பார்த்த கலா மாஸ்டர் மிகவும் எரிச்சலடைந்து ஜுலியை தள்ளிவிட்டுவிட்டு நிகழ்ச்சியை புறக்கணித்து சென்று விட்டாராம்.... தொகுப்பாளியாக்கிய கலா மாஸ்டரையே இப்படி கடுப்பேற்றி வாங்கிக் கட்டிக்கிட்டாரே...