திரையுலகில் நட்சத்திர ஜோடி என்றால் உடனே நினைவுக்கு வருவது அஜித், ஷாலினியே.... பேபி ஷாலினி என்று குழநதை நட்சத்தில் கலக்கி தற்போது அஜித்தின் மனைவியாகவும், ரசிகர்களின் அண்ணியாகவும் வலம் வருகிறார்.
இந்நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை ஷாலினிக்கு அஜித் என்ன பரிசு கொடுத்தார் தெரியுமா?...
தற்போது அஜித், அனோஷ்கா, ஆத்விக் என தன் குடும்ப பணிகள் சரியாக இருக்கிறது. இதற்கிடையே பேட்மிட்டன் விளையாட்டு போட்டிகளில் பரிசு பெற்றுள்ள ஷாலினிக்கு அஜித் கொடுத்த பரிசு சென்னை திருவான்மியூர் வீட்டில் ஒரு பேட்மிட்டன் ஆடுகளம். வீட்டில் அதற்கான பணிகள் முடிந்த பிறகு சமீபத்தில் தான் மீண்டும் குடியேறினார்கள்.
அஜித்தின் வெற்றிக்கு பின்னால் ஷாலினிக்கு முக்கிய பங்கு இருப்பதனை யாராலும் மறுக்க முடியாது....