Friday, 10 November 2017

கமல் ஆட்சிக்கு வந்தால் எப்படியிருக்கும்?.. ரகசியத்தை போட்டுடைத்த பிரபல ஜோதிடர்



தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்திற்கு பின்பு தமிழக அரசியலைக் கைப்பற்ற பெரும் போட்டி நடந்து வருகிறது.

இதற்கு மத்தியில் கமல்ஹாசன் அரசியலில் வருவதற்கு தயாராக காணப்படுகிறார். இதற்கேற்ப பிரபல ஜோதிடம் ஒருவரும் கமல்ஹாசன் தமிழகத்தின் முதலமைச்சராவார் என்று கூறியுள்ளார்.

பிரபல ஜோதிடர் ராடன் பண்டிட் கமல்ஹாசனின் ஜாதகம் மிகவும் அற்புதமான ஜாதகம் என்றும் அவர் அரசியலுக்கு வந்தால் எதிர்கட்சிகளை விட அதிக செல்வாக்கு பெற்றுவிடுவார் என தெரிவித்துள்ளார்.

மேலும், கமல்ஹாசனின் ஜாதகம் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் ஜாதகத்தைப் போல இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதாவது எம்.ஜி.ஆர் சிறந்த நடிகர் மட்டுமின்றி, சிறந்த ஆட்சியாளர், தலை சிறந்த முதல்வர் என்பது நாடறிந்த உண்மைதான்.....

இன்னும் சொல்லப்போனால், நடிகராக இருந்த ஒரு நபர் சிறந்த முதல்வராக உருவெடுத்ததை நினைவு கூறும் வகையில் அமைந்திருகிறது இந்த ஜோதிட கணிப்பு என்று தெரிவித்துள்ளார்.

மேலும் கமல்ஹாசன் திரைப்படத்துறையில் பல வெற்றிகளை பெற்றாலும் தனது வாழ்க்கையை இன்னும் வாழவில்லை எனவும் அவர் இனிமேல் வாழப்போகும் வாழ்க்கைதான் மக்களுக்கான வாழ்க்கை என தெரிவித்துள்ளார். மேலும் கமல்ஹாசன் 80 முதல் 90 வயது வரை ஆரோக்கியமாக இருப்பார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


Next

Related