பொதுவா சீரியல்னா பெண்கள் கண்ண கசக்கிக்கிட்டு பார்க்குற விஷயமாத்தான் இருந்தது. ஆனா இப்ப பசங்களும் சீரியலை மும்மரமா பாத்துட்டு வராங்க, குறிப்பா கொரியன் serial. காரணம், மெருதுவான முகம், அசத்தும் வெண்மை, கண்ணை கவரும் அழகு, இளைமையான தோற்றம் இதெல்லாத்துக்கும் சொந்தமான கொரியன் பெண்களை பார்த்த ஒடனே இளசுகளுக்கு கொண்டாட்டம்தான்.
கொரியன் பெண்களோட இந்த தனித்துவ அழகை பராமரிக்க என்னென்ன செஞ்சிட்டு வாரங்கனு நாம இப்ப பாக்கலாம்.
கொரியன் பெண்கள் எண்ணெய் பசையுள்ள க்ளன்சர்களை பயன்படுத்துறாங்க. மேலும் தங்களோட முகத்திற்கு சோப்புக்கு பதிலாக ஃபேஷ் வாஷ் மட்டுமே பயன்படுத்திவறாங்க.
இது சருமத்தில் இருக்கும் செல்களை உடனடியாக குளிர்விப்பது மட்டுமில்லாம, இது சருமத்துளைகள் பாதிப்படையாம தடுக்கும்.
இதனாலதான் கொரியன் பெண்கள் அவ்வளோ அழகா இருக்காங்க...!
கெமிக்கல்கள் கலந்த ஃபேஷ் வாஷினை விட பழங்கள் நிறைந்த ஃபேஷ் வாஷினைத் தான் அதிகம் பயன்படுத்துறாங்க. குறிப்பா, ஸ்ட்ராபெர்ரீ அதிகம் பயன்படுது.
ஸ்ட்ராபெர்ரி பழத்தை குழைத்து அதோட ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ல ஃபேஸ் பேக்காக தடவி பத்து நிமிடங்களில் கழுவி விடலாம். குளித்த பிறகோ அல்லது முகத்தை கழுவிய பிறகு நாம் மாய்சரைசர் பயன்படுத்துவோம். ஆனால் கொரியாவை சேர்ந்த பெண்கள் மாய்சரைசருக்கு முன்பாக டோனரை பயன்படுத்துறாங்க.
இப்படிச் செய்வதால சருமத் துளைகள் விரிவாகமல் இருக்கும். சருமத்தின் டெக்ஸ்சர் மிருதுவாக இருக்கும். டெய்லி காலையும் மாலையும் முகத்துக்கு ஐஸ் ஒத்தடம் கொடுக்குறாங்க. இப்படிச் செய்வதால் சருமத்தில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். அதோடு பி எச் அளவும்குறையாம இருக்கும்.
இதனாலதான் கொரியன் பெண்கள் அவ்வளோ அழகா இருக்காங்க...!
முக்கியமா, லோரியன் பெண்கள் தினமும் வெளில செல்லும் போது சன்ஸ்கிரீன் லோஷனை பயன்படுத்துறாங்க. அத தவறாம பின்பற்றியும் வராங்க. இது புற ஊதாக் கதிர்களிலிருந்து நம் முகத்த பாதுகாப்பா வெச்சிக்கும்.
ஒவ்வொரு முறையும் மேக்கப் பண்ணும்போது ஸ்ப்ரே எசன்சஸ் ah use பண்ணிடுறாங்க. அந்த எசன்ஸில் நிரம்பியிருக்கும் ப்ரோட்டீன், சருமத்தில் இருக்கும் கொலாஜன்னை சரியாக பராமரிக்க உதவுது. இது சருமம் வயதான தோற்றம் ஏற்படுறத தடுக்கும்.
அடுத்து முகத்துக்கு குடுக்குற முக்கியத்துவம் உதட்டுக்கு குடுக்கணும்ல, வெயிலால் தங்களோட உதடு நிறமாறிவிடக்கூடாது என்பதற்காக லிப் மாஸ்க் பயன்படுத்துறாங்க. இது உதடு வறண்டிடாமல் பாதுகாக்குது.
இதனாலதான் கொரியன் பெண்கள் அவ்வளோ அழகா இருக்காங்க...!
நாம் ஒரு மாய்சரைசர் வாங்கிட்டா காலம் காலமாக அதை மட்டும்தா பயன்படுத்துவோம். ஆனால் அவங்க தங்கள் சருமத்தின் தன்மைக்கேற்ப, சீசனுக்கு ஏற்ப பயன்படுத்தும் மாய்சரைசரை மாற்றிக் கொடியிருப்பாங்க. வெயில்,மழை,குளிர் என எந்த காலம் மாறினாலும் தங்கள் சருமத்தை முறையாக பராமரிக்கிறார்கள்.
வெயிலில் செல்லும் போது போடப்படும் சன்ஸ்கிரீன்,மாய்சரைசர் இரண்டையும் தூங்கச் செல்வதற்கு முன்னால் சுத்தமாக்கிட வேண்டியது அவசியமான ஒன்று. கொரியப் பெண்களின் அழகை தூக்கி காட்டுவது அவர்களது கண்கள் தான் அதுக்கு ஐ சீரம் பயன்படுத்தி வராங்க.
இதையெல்லாம் தொடர்ந்து பயன்படுத்தறதுனால மட்டுமே நிரந்தரவ தீர்வை பெற முடியும். இத நீங்க follow பன்னாதான் உங்கள பலபேரு follow பண்ணுவாங்க.