மழைக்காலம் வந்துவிட்டாலே பருவ மாற்றத்தின் காரணமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் இருமல் சளியின் என பல தொல்லைகள் உடலுக்கு வரும்.
மருத்துவ ஆலோசனையைப் பெறாமலே விளம்பரங்களில் வரும் காஃப் சிறப்களையும் குடிக்கிறோம்.
ஆனால் இதனை தவிர்த்து வீட்டிலேயே ஒரு கசாயம் வைத்து குடித்தால் சளி இருமல் சரியாகும்.
கசாயம் செய்ய தேவையானவை:
துளசி இலை (அலசி எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்)
மிளகு 10 (பொடித்து வைத்துகொள்ளுங்கள்)
சித்தரத்தை (சிறிதளவு)
இவை மூன்றையும் கொதிக்கவைத்து இறக்கிய பின் கற்கண்டு சேர்த்து கலக்கவும். பெரியவர்கள் சுடாகவும், குழந்தைகள் இதச்சுட்டிலும் பருகி வந்தால் சளி இருமல் தொல்லை சீக்கிரமாக வெளிவரலாம்.
திப்பிலியுடன் , குப்பைமேனி செடியை பொடிசெய்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் சளி, இருமலுடன் கூடிய காய்ச்சல் சரியாகும்.
ஈர பசையுடன் உள்ள வேப்பமர பட்டையை இடித்து அதில் கால் பங்கு சீரக பொடியுடன் பசும்பாலில் கலந்து சாப்பிட காய்ச்சல் குணமாகும்.