பிகார் மாநிலத்தில் நடந்த விபத்து ஒன்றில் மீன்களை ஏற்றி வந்த வேன் கவிழ்ந்தது. ஆனால் அங்குள்ள மக்கள் காயமடைந்தவர்களுக்கு உதவாமல், மீன்களை அள்ளிச் சென்றுள்ளனர்.
நேற்று முன்தினம் காலை, அராரியா மாவட்டம், சிமராஹா பகுதியில், மீன்களை ஏற்றி வந்த வேன், சாலையில் திரும்பும்போது, திடீரென கவிழ்ந்து, விபத்துக்குள்ளானது.
இந்த சம்பவத்தில், வேன் டிரைவரும், உதவியாளரும், பலத்த காயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த, அப்பகுதி மக்கள், காயமடைந்த டிரைவர் மற்றும் உதவியாளருக்கு உதவாமல், மீன்களை அள்ளிச் சென்றனர்.