பிரபல ரிவியில் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சினை தொகுத்து வழங்குபவர் ஜாக்குலின். ஆம் இந்நிகழ்ச்சில் பெரும்பாலான தருணங்களில் இவரை கலாய்த்து அசிங்கப்படுத்தி அதை நகைச்சுவையாக மாற்றிக் கொள்கின்றனர்.
தற்போது இந்நிகழ்ச்சியில் ஜாக்குலின் மன வருத்தத்தில் உள்ளார். ஆம் இந்த வாரம் எல்லை மீறியுள்ளது என்று பார்வையாளர்கள் கூறி வருகின்றனர்.
இந்த வாரம் சிறப்பு விருந்தினராக வந்திருந்த சென்ராயனும், ஜான் விஜய் இவர்கள் இருவரும் சேர்ந்து ஜாக்குலினை மிகவும் அவமானப்படுத்தியுள்ளார்களாம். தவறான எண்ணத்துடன் கதைப்பதும், பார்ப்பதும், தொட்டுப் பேசுவதுமாக இருந்துள்ளனர்.
இதில் ஒரு கட்டத்தில் ஜாக்குலின் என்னைத் தொட வேண்டாம் என்று முகத்திற்கு நேரகவும் கூறியுள்ளார். ஒரு தருணத்தில் எதுவும் பேச முடியாத நிலையில் சில நொடிகள் கண் கலங்கி நின்றுள்ளார் ஜாக்குலின்.
கொமடி என்ற பெயரில் பெண்களை அவமானப்படுத்துவதும், அவர்களுக்கு எதிராக பேசுவதால் பார்வையாளர்கள் பிரபல ரிவியின் மேல் பெரும் கடுப்பில் உள்ளனர்.