Monday, 20 November 2017

கவர்ச்சி காட்டிய வீரம், ஜில்லா காமெடி நடிகை... அழகோ அழகு...!



காமெடி நடிகை வித்யுலேகாவின் புகைப்படம் ஒன்று தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் காமெடி நடிகை வித்யுலேகா. இவர் நடிகர் மோகன் ராமின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2012ம் ஆண்டு வெளிவந்த கௌதம் மேனனின் நீ தானே என் பொன்வசந்தம் மற்றும் எட்டோ வெளிபொயிந்தி மனசு ஆகிய படங்களின் மூலம் முதன் முதலாக தோன்றினார்.

இதில், ஜென்னி எனும் கதாபாத்திரத்தில் நடிகை சமந்தாவின் தோழியாக நடித்திருந்தார். இப்படத்தைத் தொடர்ந்து சுந்தர் சி இயக்கத்தில் வந்த தீயா வேலை செய்யனும் குமாரு படத்தில் நடிகர் சந்தானத்திற்கு ஜோடியாக நடித்தார்.


மேலும், வீரம், ஜில்லா, வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க, வேதாளம் உள்பட பல படங்களிலும் நடித்துள்ளார்.

இதுவரை காமெடி ரோலில் மட்டும் நடித்து வந்த இவருக்கு தற்போது ஹீரோயினாக வேண்டும் என்ற ஆசை வந்து விட்டது போன்ற ஒரு புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.


அதோடு, ஒரு நடிகை காமெடி கதாபாத்திரத்தில் நடிக்கும் போது மக்கள் அவரை கவர்ச்சியாக பார்க்கவோ, உணரவோ முடியாது என்று பதிவிட்டுள்ளார். கவர்ச்சி உடையில் இருக்கும் வித்யுலேகாவின் அந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Next

Related