செவ்வாய், குரு, புதன் அனுகூல அமர்வில் உள்ளனர். தாமதித்த பணியில் முன்னேற்றம் ஏற்படும். எவரிடமும் நிதானித்து பேசுவது நல்லது. வாகனத்தில் பராமரிப்புபணி செய்வதால் பயணம் எளிதாகும். புத்திரரின் கருத்திற்கு முக்கியத்துவம் தருவீர்கள். விரும்பிய உணவு வகைகளை உண்டு மகிழ்வீர்கள். மனைவியின் செயல்பாடு நிம்மதிக்கு வழிவகுக்கும். தொழில், வியாபாரத்தில் தடைகள் குறுக்கிடலாம். லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் நிர்வாகத்தின் சட்டதிட்டம் மதித்து பணிபுரிவது நல்லது. பெண்களுக்கு வீட்டுச் செலவில் சிக்கனம் வேண்டும். மாணவர்கள் கூடுதல் பயிற்சியால் சீரான மதிப்பெண் பெறலாம்.
ரிஷபம்:
ராகு சுக்கிரன் சூரியன் அளப்பரிய நன்மை தருவர். நண்பரின் ஆறுதல் பேச்சு மனதில் நம்பிக்கை வளர்க்கும். வாழ்வில் வளர்ச்சிக்கான புதிய செயல் திட்டம் உருவாகும். தாய்வழி உறவினர்களால் உதவி கிடைக்கும். புத்திரர் நல்வழியில் நடந்து நற்பெயர் பெறுவர். ஆரோக்கியம் பலம் பெறும். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள். மனைவியால் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். வெளியூர் பயணத்தால் பணச்செலவு அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சியும் பணவரவும் கூடும். பணியாளர்கள் பொறுப்புணர்வுடன் பணி புரிந்து சலுகை பெறுவர். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் காண்பர்.
மிதுனம்:
புதன், குரு, சுக்கிரன் சனீஸ்வரர் நற்பலன்களை வழங்குவர். பணிகளை ஆர்வமுடன் நிறைவேற்றுவீர்கள். உறவினர்களின் வருகை மகிழ்ச்சி தரும். புத்திரர் பெற்றோர் சொல்லை வேதமென ஏற்றுக் கொள்வர். நோய் தொந்தரவு குறையும். வழக்கில் நல்ல முடிவு கிடைக்கும். மனைவியின் சொல்லும் செயலும் குடும்பநலனுக்கு வழிவகுக்கும். தொழில்,வியாபாரத்தில் அபிவிருத்திப்பணி மேற்கொள்வீர்கள். லாபம் உயரும். பணியாளர்கள் புதிய தொழில் நுட்பங்களை ஆர்வமுடன் கற்பர். வெளியூர் பயணம் இனிய அனுபவம் தரும். பெண்களுக்கு தாய்வழி உறவினரின் அன்பை பெறுவர்.
மாணவர்களுக்கு படிப்பில் ஞாபகத்திறன் மேம்படும்.
கடகம்:
செவ்வாய், சந்திரன், சுக்கிரனால் நன்மை உண்டாகும். அன்றாட நடைமுறை வாழ்வில் இருந்த சிரமம் குறையும். உங்களைஅவமதித்தவரும் அன்பு பாராட்டுவர். வாகனப்பயணம் இனிய அனுபவம் தரும். புத்திரரின் அறிவுப்பூர்வமான செயல்களை கண்டு மனம் மகிழ்வீர்கள். நோய் தொந்தரவு குறையும். குடும்பத்தில் சுபவிஷய பேச்ச நடந்தேறும். உறவினர் வருகை மகிழ்ச்சி தரும். மனைவி அன்பு பாசத்துடன் நடந்து கொள்வார். தொழில் வியாபாரத்தில் இடையூறு விலகி பணவரவு அதிகரிக்கும். பணியாளர்கள் பணி இலக்கை எளிதில் நிறைவேற்றுவர். பெண்கள் வீட்டு உபயோகப்பொருள் வாங்குவர். மாணவர்கள் படிப்புடன் விளையாட்டிலும் ஈடுபடுவர்.
சிம்மம்:
சூரியன், சுக்கிரன், கேது, புதன் அதிக நன்மை தருவர். மனதில் சாந்த குணம் நிறைந்திருக்கும். நண்பர்களின் ஆலோசனையை ஏற்று பின்பற்றுவீர்கள். புதிய வீடு, வாகனம் வாங்க நிதியுதவி கிடைக்கும். புத்திரர் படிப்பு, வேலைவாய்ப்பில் முன்னேற்றம் காண்பர். நிர்பந்த கடனில் ஒரு பகுதியை செலுத்துவீர்கள். ஒவ்வாத உணவுகளை உண்ண வேண்டாம். மனைவி கருத்து ஒற்றுமையுடன் நடந்து கொள்வார். தொழில், வியாபாரம் செழித்து லாபம் அதிகரிக்கும். பணியாளர்கள் பணி இலக்கை எளிதில் பூர்த்தி செய்வர். பெண்கள் பிள்ளைகள் நலனில் அக்கறை கொள்வர். மாணவர்கள் போட்டியில் பங்கேற்று பரிசு பெறுவர்.
கன்னி:
ராகு, குரு, சுக்கிரன், சனீஸ்வரர் அனுகூல அமர்வில் உள்ளனர். பேச்சில் இனிமை வெளிப்படும். எதிர்பார்த்த நன்மை எளிதில் வந்து சேரும். வீடு வாகனத்தில் தேவையான மாற்றம் செய்வீர்கள். பூர்வ புண்ணிய பலன் நல்ல விதமாக துணை நிற்கும். புத்திரர் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். ஆரோக்கியம் சீராக இருக்கும். சுப நிகழ்ச்சிகளில் ஆர்வமுடன் கலந்து கொள்வீர்கள். மனைவி வழி சார்ந்த உறவினர்களின் உதவி கிடைக்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற புதிய மாற்றம் செய்வீர்கள். பணியாளர்கள் கூடுதல் வேலை வாய்ப்பு மூலம் வருமானம் காண்பர். பெண்கள் தாய் வீட்டு உதவியை கேட்டுப் பெறுவர். மாணவர்கள் படிப்புடன் கலைகளும் பயில்வர்.
துலாம்:
சுக்கிரன், சந்திரனால் நற்பலன் கிடைக்கும். அன்றாட பணிகளில் உற்சாகமுடன் ஈடுபடுவீர்கள். தாய்வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். புத்திரர் எதிர்கால நலனில் அக்கறை கொள்வீர்கள். ஆரோக்கியம் சீராக இருக்கும். கடனில் ஒரு பகுதியை செலுத்துவீர்கள். மனைவியின் ஆலோசனை வளர்ச்சிக்கு வழிவகுக்கும். தொழில், வியாபாரத்தில் போட்டி குறைந்து லாபம் கூடும். பணியாளர்கள் குறித்த காலத்தில் பணி இலக்கு நிறைவேற்றுவர். பெண்கள் பிரார்த்தனை நிறைவேறி இஷ்ட தெய்வ வழிபாடு நடத்துவர். மாணவர்களுக்கு படிப்பில் கவனம் அதிகரிக்கும்.
விருச்சகம்:
செவ்வாய், சுக்கிரன், கேது நற்பலன் வழங்குவர். மனதில் நிம்மதி நிறைந்திருக்கும். நண்பர்களின் மத்தியில் மதிப்பு உயரும். வாகனப்பயணம் அளவுடன் மேற்கொள்வீர்கள். தாராள பணச்செலவில் புத்திரர் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். குடும்பத்தில் சுபவிஷயம் குறித்த பேச்சு நடக்கும். சொத்து ஆவணம் பிறர் பொறுப்பில் தர வேண்டாம். மனைவி கருத்திணக்கமுடன் நடந்து கொள்வார். உறவினர்களின் வாழ்த்து கிடைக்கும். தொழிலில் உற்பத்தி விற்பனை சுமாராக இருக்கும். பணியாளர்களுக்கு கடனுதவி கிடைக்கும். பெண்கள் குடும்பத்தினர்களின் பரிபூரண அன்பை பெறுவர். மாணவர்கள் படிப்பில் உரிய பயிற்சி வேண்டும்.
தனுசு:
சூரியன், குரு, சந்திரனால் நன்மை உண்டாகும். எதிர்ப்பாளரால் இருந்த தொல்லை விலகும். வாழ்வில் புதிய நல்ல மாற்றம் உருவாகும். உடன்பிறந்தவர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வாகனப் பயணத்தால் நன்மை அதிகரிக்கும். புத்திரரின் குளறுபடியான செயல்களை இதமுடன் சரி செய்வீர்கள். இஷ்ட தெய்வ வழிபாடு நடத்துவீர்கள். வழக்கு, விவகாரங்களில் தாமதம் ஏற்படலாம். மனைவியின் உடல் நலத்தில் கவனம் செலுத்துவது நல்லது. வெளியூர் பயணத்தின் மூலம் நன்மை காண்பீர்கள். தொழில், வியாபாரத்தில் அளவான பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் கூடுதல் வேலை வாய்ப்புக்கேற்ப வருமானம் காண்பர். பெண்கள் பிறருக்காக பணப்பொறுப்பு ஏற்க வேண்டாம். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவர்.
மகரம்:
சூரியன், புதன், சுக்கிரன், சனீஸ்வரர் அனுகூல அமர்வில் உளளனர். சாதனை நிகழ்த்தும் எண்ணத்துடன் பணியில் ஈடுபடுவீர்கள். வளர்ச்சிக்கான சூழ்நிலை உருவாகும். தம்பி தங்கைக்கு இயன்ற அளவில் உதவுவீர்கள். வீடு வாகனத்தில் உரிய பாதுகாப்பு நடைமுறை பின்பற்றவும். புத்திரரின் செயல்கள் பாராட்டும் விதத்தில் இருக்கும். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள். நண்பரிடம் கடனாக கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும். மனைவி விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி பணியில் ஈடுபடுவீர்கள். சுற்றுலா பயணத் திட்டத்தில் மாற்றம் ஏற்படும். பணியாளர்களுக்கு ஓரளவு சலுகை கிடைக்கும். பெண்கள் தாராள பணவசதியுடன் சந்தோஷ வாழ்வு நடத்துவர். மாணவர்கள் வெளியிடம் சுற்றுவதை தவிர்க்கவும்.
கும்பம்:
புதன், குரு, சுக்கிரன், ராகு அளப்பரிய நற்பலன் வழங்குவர். பணிகளில் உற்சாகமுடன் ஈடுபடுவீர்கள். உடன்பிறந்தவர் வகையில் சுபநிகழ்ச்சி நடந்தேறும். தாய்வழி உறவினர்களின் உதவி கிடைக்கும். பிள்ளைகள் அறிவாற்றல், செயல் திறனில் மேம்படுவர். ஆரோக்கியம் பலம் பெறும். சிரமம் அணுகாத சுமுக வாழ்வு உருவாகும். மனைவியின் எண்ணங்களுக்கு முக்கியத்துவம் தருவீர்கள். தொழில், வியாபார வளர்ச்சியால் லாபம் அதிகரிக்கும். பணியாளர்கள் பணி இலக்கை எளிதில் நிறைவேற்றுவர். பெண்கள் உறவினர்களை உபசரித்து மகிழ்வர். மாணவர்கள் விரும்பிய பொருட்களை பெற்றோர் வாங்கித் தருவர்.
மீனம்:
கேது, சந்திரனால் நன்மை கிடைக்கும். திட்டமிட்ட செயல் நிறைவேற கூடுதல் முயற்சி உதவும். உடன்பிறந்தவரால் உதவி கிடைக்கப் பெறுவீர்கள். வீடு வாகனத்தில் பாதுகாப்பு நடைமுறையை பலப்படுத்தவும். பிள்ளகைளின் உடல் நலத்திற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம். பகைவரின் கெடுசெயல் உணர்ந்து விலகுவது நல்லது. பெறறோர் தேவையறிந்து உதவ முன்வருவீர்கள். மனைவியின் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பது நன்மைக்கு வழிவகுக்கும். தொழில், வியாபாரத்தில் விடாமுயற்சியும், கடின உழைப்பும் தேவைப்படும். பணியாளர்கள் அதிக பணம் கடன் பெற வேண்டாம். பெண்கள் நகை, பணம் இரவல் கொடுக்க வேண்டாம். மாணவர்கள் படிப்பு தவிர பிற விஷயம் பேச வேண்டாம்.