Friday, 10 November 2017

தூங்கி எழுந்தவுடன் தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?



பொதுவாக காலையில் தினமும் எழுந்தவுடன் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பழக்கத்தை செய்து வருவார்கள்.

ஒருசிலர் காலையில் படுக்கையில் இருக்கும் போதே பெட்காபி குடிப்பார்கள். இன்னும் சிலர் தண்ணீரை குடிப்பார்கள்.

இந்த இரண்டு பழக்கங்களிலும், நாம் தினமும் காலையில் எழுந்து 60 நொடிகளில் தண்ணீர் குடிப்பது தான் நம் உடம்பிற்கு நல்ல ஆரோக்கியத்தை தருகிறது.

எனவே காலையில் எழுந்தவுடன் 60 நிமிடங்களில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.


  • காலையில் எழுந்ததும் 300 மி.லி அளவு நீர் குடித்தால், ஒன்றரை மணி நேரத்தில் நமது உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்றத்தை 24% வரை அதிகம் அதிகரிக்கச் செய்கிறது.
  • தண்ணீர் குடிப்பதால், நமது உடம்பின் ரத்தத்தில் உள்ள நச்சுக்கள் மற்றும் உடலில் தேவையின்றி தேங்கியிருக்கும் கழுவுகளை போக்கி, நமது உடலின் செயல்திறனை ஊக்குவிக்கிறது.
  • தூங்கி எழுந்ததும் 60 நொடிகளில் நீர் குடித்து வருவதன் மூலம் பசியின் அளவைக் குறைத்து, அதிக அளவு உடல் பருமன் ஏற்படுவதைக் குறைக்கிறது.
  • காலையில் நீர் அதிகமாக குடிப்பதால், நமது உடலில் நீர்ச்சத்துக்கள் அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்திக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமல், நிணநீர் மண்டலத்தை வலுவடையச் செய்கிறது.
  • தினமும் நாம் காலையில் சீரான அளவில் தண்ணீரைக் குடித்து வந்தால், நமது உடலின் சருமத்தில் அதிக சுருக்கம் மற்றும் வறட்சியை ஏற்படுத்தாமல் மிருதுவான சருமத்தை தருகிறது.
  • தினமும் நமது உடம்பிற்கு தேவையான அளவு நீர் குடிப்பதால், குடல் இயக்க செயல்பாட்டை சீராக்கி. மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளைத் தடுக்கிறது.


Next

Related