Tuesday, 28 November 2017

சர்ச்சை நடிகை நமீதாவின் திருமணத்தில் இத்தனை சுவாரஷ்யங்களா..?



நடிகை நமீதா என்பதை பிக்பாஸ் நமீதா என்றால் சற்று சர்ச்சை இருக்கும் என்பதே பலரின் எண்ணம். தன் காதலை கடந்த நவம்பர் 24 ல் திருப்பதியில் திருமணம் செய்து கொண்டார்.

இந்நிகழ்வை பற்றி சில சுவாரசிய விஷயங்கள்...

நடிகை நமீதாவிடம் வீர் தான் முதலில் காதல் சொன்னாராம். பின் நமீதா ஓகே சொல்ல. ஒரு வருடம் இந்த காதல் தொடர்ந்துள்ளது. நமீதா குஜராத்தி. அவரது கணவர் வீர் தெலுங்கு.

நமீதாவின் நண்பர்கள் 10 முதல் 15 திருமண பத்திரிக்கை மாடல்களை எடுத்துக்கொடுக்க அதிலிருந்து நமீதா கிளாசிக் மாடல் ஒன்றை தேர்வு செய்தாராம்.

கல்யாணத்துக்கு முக்கியமே பட்டு புடவை தான். ஆனால் இவரது திருமண பட்டில் நமீதாவின் ஃபேவரைட் கிருஷ்ணா ராதையை டிசைன் செய்திருக்கிறார்களாம்.

இருவரும் வெவ்வேறு மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர்கள் என்பதால் இரு வீட்டு முறைபடியும் தாலி கட்டினார்களாம். மேலும் வைரத்தாலி என மூன்று தாலி அணிவிக்கப்பட்டதாம்.


திருமண நகைகள், மற்ற பொருட்கள் எல்லாம் ஆன்லைன் மூலமே வாங்கிவிட்டார்களாம். தற்போது நமீதாவின் நண்பர் ஒருவர் இசையமைப்பாளராக இருக்கிறாராம்.

அவர் மற்றும் நண்பர்கள் ஒன்று சேர்ந்து நமீவீர் கல்யாணம்... நமீவீர் விவாஹம் என ஒரு ஆல்பம் ரெடி பண்ணுகிறார்களாம். இதன் ஷுட்டிங் டிசம்பரில் ஆரம்பமாகிறது.


Next

Related