‘சிவா மனசுல சக்தி’, ‘நண்பன்’ உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த நடிகை அனுயாவின் மார்பிங் செய்யப்பட்ட ஆபாச படம் சமூக வலைதளங்களில் பறவி வருகின்றது.
இந்நிலையில் டிவிட்டரில் இருந்து ஆபாச படத்தை நீக்குமாறு சைபர் கிரைம் பொலிசில் புகார் மனு அளித்துள்ளார். இது குறித்து நடிகை அனுயா, ஆந்திராவில் உள்ள சைபர் கிரைம் பொலிசில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அந்த புகாரில், சமூகவலை தளத்தில் மார்பிங் செய்யப்பட்ட எனது ஆபாச படம் பரவி வருகிறது. இது எனது புகழுக்கு களங்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
எனவே அந்த ஆபாச படத்தை டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இருந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறிஉள்ளார்.
இவ்விவகாரம் தொடர்பாக ஏற்கனவே விசாரணையை தொடங்கிவிட்டதாக பொலிசார் தெரிவித்து உள்ளனர்.