Monday 6 November 2017

மலேசிய தேசிய உணவினை ஆடையாக அணிந்த அழகி! வைரலாகும் புகைப்படம்



மலேசியாவை சேர்ந்த அழகி ஒருவர் Miss universe 2௦17- இல் கலந்து கொண்ட போது அந்நாட்டின் பாரம்பரிய உணவான Nasi Lemak என்ற உணவு வகை போன்று ஆடையினை டிசைன் செய்து அணிந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Nasi Lemak என்பது மலேசியாவின் பாரம்பரிய உணவாகும். தேங்காய் பாலில் தயார் செய்யப்பட்ட சாதம், கடலை, நெத்தலி, சம்பல், முட்டை ஆகியவை வைத்து ஒரு தட்டில் பரிமாறப்படும்.

இந்நிலையில் மொடல் அழகியான Samantha Katie, இந்த உணவு வகைகள் போன்று டிசைன் செய்யப்பட்ட ஆடையினை அணிந்து கொண்டு அதனை புகைப்படம் எடுத்து தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஒரு தேசிய உணவினை இவ்வாறு அவமானப்படுத்துவதா என இதற்கு சில எதிர்மறை கருத்துக்கள் வந்துள்ளன. மேலும், மிஸ் யுனிவர்ஸ் மலேசியா நிறுவனத்தின் தேசிய இயக்குனர் Elaine Daly கூறியதாவது, “ இது ஒரு பிரபலமான தேசிய ஆடை ஆகும்.

கடந்த ஆண்டு சின்னமான இரட்டை கோபுரத்தினை அடிப்படையாக கொண்ட ஆடையினை பயன்படுத்தினோம், இந்த ஆண்டு உணவினை பயன்படுத்தியுள்ளோம் என கூறியுள்ளார்.


Next

Related