இந்திய கிரிக்கெட் வீரர் தோனி எந்த அளவு பிரபலமோ, அதேபோல் அவரது மகள் ஸிவாவும் சமூக வலைதளங்களில் அவர் செய்யும் செயல்களால் பிரபலமாகி வருகிறார்.
தோனி மகள் வீராட் கோலியுடன் விளையாடிய காட்சி சமீபத்தில் வெளியாகி வைரலானது. இதற்கு காரணம் அவர் தோனி மகள் என்பது மட்டுமல்ல, அவரது மழலை மொழியுடன் கூடிய குறும்பு செயல்கள் என்று கூறலாம்.
ஸிவா பியானோ வாசிக்கும் வீடியோ, ஸிவா மலையாள பாடல் பாடும் வீடியோ என வெளியாகி வந்தது. இதனை தொடர்ந்து தற்போது அவர் சப்பாத்தி கட்டையால் சப்பாத்தியை உருட்டுகிறார். இந்த காணொளி தற்போது சமூக வளைதளங்களில் வைரலாகி வருகிறது.