ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண் கவிஞரும், பாடகியுமான சியா ஃபர்லர் தனது நிர்வாணப் புகைப்படத்தை தானே எடுத்து ட்விட்டர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
முகமூடி மற்றும் இறகுகளைப் பயன்படுத்தி, பொதுவெளியில் எப்போதும் தனது முகத்தை இவர் மூடிக்கொள்வது வழக்கம்.
தனது நிர்வாணப் புகைப்படங்களை விற்பனை செய்ய முயன்ற புகைப்படக் கலைஞர்களை எதிர்கொள்ளும் விதமாக, சியா ஃபர்லர் அவரது புகைப்படத்தை அவரே வெளியிட்டுள்ளார்.
பின்புறத்தை காண்பிப்பது போல மங்களான புகைப்படத்தை வெளியிட்டு என் நிர்வாண புகைப் படத்தை விற்பனை செய்ய யாரோ முயன்றுள்ளார். எனவே உங்கள் பணத்தை வீணாக்காதீர்கள். இதோ இலவசமாகவே அந்த புகைப்படம் இங்கு உள்ளது. அந்தப் பாடகியின் மேலும் 14 படங்கள் இருப்பதாகவும் தெரிகின்றது.
மேலும் அப்புகைப்படத்துடன் ”கிறிஸ்மசைக் கொண்டாடுங்கள்” என்றும் பதிவிட்டிருந்தார். இவரது 'எவிரிடே இஸ் கிறிஸ்துமஸ்' எனும் இசைத்தொகுப்பு பற்றி வேண்டுமென்றே இப்படி குறிப்பிடப்படுவதற்காக கிறிஸ்துமஸ் குறித்து அவர் குறிப்பிட்டுள்ளார் என்று கூறிவருகின்றனர்.