Friday, 1 December 2017

வெள்ளிதிரையில் கால் பதிக்கும் ஜூலி...யாருடன் நடிக்க போகிறார் என தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க



ஜல்லிக்கட்டில் வீர தமிழச்சி என்று பெயர் எடுத்த ஜூலி பிக்பாஸில் அந்த பெயரையே இழந்தார்.

பிக்பாஸில் இருந்து வெளியே வந்த இவருக்கு தனியார் தொலைகாட்சியில் தொகுப்பாளாராக வாய்ப்பு கிடைத்தது. மேலும் அவர் அளித்த பேட்டிகளில் தனக்கு படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் உள்ளதாக கூறினார்.

குறிப்பாக தல அஜித் உடன் தான் நடிக்க விரும்புகிறேன் என்றார். ஆனால் தற்போது விஜய், முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் படத்தில் தங்கை கதாபாத்திரத்தில் நடிக்க ஜுலிக்கு வாய்ப்பு அளித்துள்ளனராம்.

ஜுலிக்கு கிடைத்த இந்த வாய்ப்பையாவது சரியாக பயன்படுத்தி கொள்வாரா?


Next

Related