அஜித் தற்போது சிவா இயக்கத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பல்கேரியாவில் நடந்து வருகின்றது.
இந்நிலையில் நடிகர் பாண்டு சமீபத்தில் ஒரு பேட்டியில் அஜித் குறித்து மனம் திறந்துள்ளார். இவர் அஜித்துடன் வாலி, காதல்கோட்டை, வரலாறு ஆகிய படங்களில் நடித்தவர்.
இவர் கூறுகையில் ‘அஜித் மிகவும் எளிமையான மனிதர், மற்றவர்களுக்கு எந்த விதத்திலும் தன்னால் தீங்கு வரக்கூடாது என நினைப்பவர்.
மேலும், கெட்ட எண்ணம் கொண்டவர்கள் ஒரு போதும் தன் அருகில் இருக்கக்கூடாது என்று பார்த்துக்கொள்வார்’ என கூறியுள்ளார்.