Friday, 3 March 2017

உச்சக்கட்ட கோபத்தில் சுசித்ரா- முதன் முறையாக போனில் பதில்



சுசித்ரா பிரச்சனை நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே போகின்றது. நடிகர் தனுஷ், டிடி, த்ரிஷா, ஹன்சிகா என அனைவர் குறித்தும் டுவிட்டரில் இவர் தவறான புகைப்படங்களை வெளியிட்டு வந்துள்ளார் என கூறப்பட்டது.

ஆனால், இவரோ என் அக்கவுண்ட் ஹாக் செய்யப்பட்டு விட்டது என்று கூறினார், இதுக்குறித்து விளக்கம் தெரிவிக்க மறுத்த இவர் முதன் முறையாக தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு நேரில் பேட்டியளித்துள்ளார்.

இதில் ‘என் அக்கவுண்ட் இரண்டாவது முறையாக ஹாக் செய்யப்பட்டுள்ளது, சைபர் கிரைமில் புகார் கொடுத்துவிட்டோம், அவர்கள் என் அக்கவுண்டையே முடக்க சொல்கிறார்கள்.

அப்படி செய்தால், இதை யார் செய்தது என கண்டுப்பிடிக்க முடியாது, அதனால், நான் தனிப்பட்ட முறையில் இதை கண்டுப்பிடிக்க ஆள் நியமித்துள்ளேன்.

மேலும், சென்ற முறை ஹாக் செய்தவர்களே இந்த முறையும் ஹாக் செய்துள்ளார்கள்’ என அவர் கூறியுள்ளார்.


Next

Related