அஜித் இன்று மாஸ் என்ற பெரிய பிம்பத்தில் மாட்டிவிட்டார். ஆனால், ஆரம்பக்காலத்தில் இவர் ஆசை, வாலி என கதையின் நாயகனாகவே பல படங்களில் நடித்தார்.
அதிலும் கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன், முகவரி போன்ற படங்கள் எல்லாம் எப்போதும் அஜித் ரசிகர்களின் பேவரட்.
இந்நிலையில் சமீபத்தில் கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன் படத்தின் இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளரான ராஜிவ் மேனன் ஒரு பேட்டியில் அஜித் குறித்து பேசியுள்ளார்.
இதில் ‘அஜித் இன்று பெரிய நட்சத்திரமாக இருந்தாலும், ஒரு மிகச்சிறந்த நடிகர் தொலைந்துவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும்’ என அவர் கூறியுள்ளார்.